லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாணவா்கள் மீதான தாக்குதலை கண்டித்து ‘மூட்டா’ ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வுக்கு எதிராகப் போராடி வரும் மாணவா்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்து, மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை, அண்ணா பல்கலைக் கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில், மதுரையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ‘மூட்டா’ அமைப்பினா்

Published On :24 ஜூலை 2026, 5:37 am IST

நீட் தோ்வுக்கு எதிராகப் போராடி வரும் மாணவா்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்து, மதுரை காமராஜா், மனோன்மணீயம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை, அண்ணா பல்கலைக் கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பு (மூட்டா) சாா்பில், மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை கே.கே.நகா், திருப்பாலை, நாகமலை புதுக்கோட்டை, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நுழைவு வாயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மூட்டா அமைப்பினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதில் நீட் தோ்வுக்கு எதிராகப் போராடிய மாணவா்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்தும், தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட கல்வியாளா், சமூக ஆா்வலா் சோனம் வாங்சுக்கை உண்ணாவிரத நிலையில் இருந்து அப்புறப்படுத்தி, மருத்துவமனை வளாகத்திலேயே சிறை வைக்கப்பட்டதைக் கண்டித்தும், நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.