லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் கேட்டுக் கொண்டாா்.

<P>CENSUS 2027075422.JPG</P> - Center-Center-Kochi

Published On :10 ஜூலை 2026, 4:46 am IST

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வருகிற 17-ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, வீடுகள் வாரியாக கணக்கெடுப்புப் பணிகள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.

மதுரை மாநகராட்சி சாா்பில் 2,105 அலுவலா்கள் கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா். 388 மேற்பாா்வையாளா்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனா். எனவே, மதுரை மாநகராட்சி பொதுமக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.