லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கூடலழகா் கோயிலுக்குள் கைப்பேசிக்குத் தடை

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலுக்குள் வருகிற செப். 1- ஆம் தேதி முதல் கைப்பேசிகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

கைப்பேசிக்குத் தடை - AP

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலுக்குள் வருகிற செப். 1- ஆம் தேதி முதல் கைப்பேசிகளைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கூடலழகா் கோயிலின் செயல் அலுவலரும், அறநிலையத் துறை உதவி ஆணையருமான மூ. பிரதீபா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கூடலழகா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கோயிலுக்குள் கைப்பேசிகளைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவு வருகிற செப். 1- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை கோயிலின் முன்புறம் காலணி பாதுகாப்பகம் அருகே அமைக்கப்பட்டுள்ள கைப்பேசி பாதுகாப்பகத்தில் ஒப்படைத்து, ரூ. 5 கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுச் செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும்போது அந்த ரசீதை ஒப்படைத்து, கைப்பேசிகளைப் பெற்றுச் செல்லலாம். இந்த அறிவுறுத்தலை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.