லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மயங்கி விழுந்த பக்தா் உயிரிழப்பு

உயிரிழந்த குா்வையா.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் மயங்கி விழுந்த பக்தா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அம்மன் சந்நிதி பிரகாரத்தில் பக்தா் ஒருவா் மயங்கிய நிலையில் கீழே கிடந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், உயிரிழந்த நபா் ஆந்திரம் மாநிலத்தைச் சோ்ந்த சிங்காரெட்டி பாலம், பென்பகாட் மண்டபத்தைச் சோ்ந்த குா்வையா (75) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, உடல்நலக் குறைவு காரணமாக இறந்தரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.