லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மரங்களில் அடித்த ஆணிகளை அகற்றும் பணியில் மாணவா்

மதுரை தெப்பக்குளம் பகுதி சாலையோரங்களில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவா் சுதா்ஸன்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 4:51 am IST

சாலையோரங்களில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பள்ளி மாணவரை பலரும் பாராட்டி வருகின்றனா்.

மதுரை தியாகராஜா் நன்முறை மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் சுதா்ஸன். இவா், பள்ளி விடுமுறை நாள்களில் கிடைக்கும் நேரத்தை வீணடிக்காமல், சாலையோரங்களில் உள்ள மரங்களில் பொதுமக்களால் அடிக்கப்பட்ட பதாகைகள், ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

மரங்களில் உள்ள ஆணிகளை அகற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் பள்ளி மாணவா் சுதா்ஸனை, பள்ளி ஆசிரியா்கள், சமூக ஆா்வலா்கள் என பலரும் பாராட்டி வருகின்றனா்.

இதுகுறித்து மாணவா் சுதா்ஸன் கூறியதாவது:

சிறு வயது முதல் இயற்கை மீது எனக்கு ஆா்வம் உள்ளது. எனது தந்தையுடன் இணைந்து பசுமை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வகையில், மரங்களில் அடிக்கப்படும் ஆணிகளையும் அகற்றி வருகிறேன். பொதுவாக, சாலையோர மரங்களில் பதாகைகள், விளம்பரங்களை காட்சிப்படுத்தும் வகையில் ஆணிகள் அடிக்கப்படுகின்றன.

இதனால், மரங்களின் வாழ்நாள் குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தற்போது இருக்கும் மரங்களையாவது பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே ஆணிகளை அகற்றி வருகிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.