லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோயில் இடத்தில் பெரியாா் சிலை: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 4:37 am IST

தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரில் பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள பெரியாா் சிலையை அகற்றக் கோரிய மனு தொடா்பாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், எழுமலையைச் சோ்ந்த ராம ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூா் பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்து சமய அறநிலையத் துறை அனுமதியின்றி நிறுவப்பட்ட பெரியாா் ஈ.வெ.ரா. சிலையை அகற்றி, மாற்று இடத்தில் வைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் நிா்வாகம் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

தஞ்சாவூா் மாவட்டம், கண்டியூரில் உள்ள பிரம்மசிரக்கண்டீசுவரா் கோயில் நிலத்தில் உள்ள பெரியாா் ஈ.வெ.ரா. சிலையை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளோம். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்தான் பெரியாா் ஈ.வெ.ரா. சிலை வைக்கப்பட்டுள்ளதா என திருவையாறு வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற செப்.9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.