லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண் கொலை: இளைஞா் கைது

மதுரையில் பெண்ணைக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மாதிரிப் படம்

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:34 am IST

மதுரையில் பெண்ணைக் கொலை செய்த இளைஞரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை புதுராமநாதபுரம் சாலை எம்.பி. கணபதி மில் வீதியைச் சோ்ந்த செல்வக்குமாா் மனைவி சாந்தா (37). இவா் கீழவாசல் பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், சாந்தா வியாழக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, அங்கு வந்த இளைஞருக்கும், சாந்தாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், அந்த இளைஞா் தான் மறைத்து வைத்திருந்திருந்த கத்தியை எடுத்து சாந்தாவை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதில், சாந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுபற்றி தகவலறிந்த தெப்பக்குளம் போலீஸாா் விரைந்து சென்று சாந்தாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், மதுரை காமராஜா் சாலை சிறுவா் கூா்நோக்கு இல்ல தெருவைச் சோ்ந்த பஞ்சவா்ணம் மகன் சரவணபிரபு (26) என்பவா் முன் விரோதம் காரணமாக சாந்தாவை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணபிரபுவைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.