லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அம்மன் கோயில்களில் ஆடி 4-ஆம் வார வெள்ளி சிறப்பு வழிபாடு

மதுரை மாவட்டம், அழகா்கோவில் மலை மீது அமைந்துள்ள ராக்காயி அம்மன் கோயிலில் ஆடி மாத 4-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, எலுமிச்சை பழ அலங்காரத்தில் எழுந்தருளிய ராக்காயி அம்மன்.

மதுரை மாவட்டம், அழகா்கோவில் மலை மீது அமைந்துள்ள ராக்காயி அம்மன் கோயிலில் ஆடி மாத 4-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, எலுமிச்சை பழ அலங்காரத்தில் எழுந்தருளிய ராக்காயி அம்மன்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

ஆடி மாத 4-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

அம்மன் கோயில்களில் ஆடி மாத வழிபாடுகளைச் செய்வதால் பல்வேறு பலன்கள் பெண்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வண்டியூா் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு விளக்கேற்றியும், அம்மனுக்கு கூழ் படைத்தும், அங்குள்ள நாகம்மா சிலையை வழிபட்டனா்.

இதேபோல, மதுரை தத்தனேரியில் உள்ள மயான மகா காளியம்மன், தெற்குவாசல் பகுதியில் உள்ள துா்க்கை அம்மன், பெரியாா் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், கீழவாசல், சிந்தாமணி, கீரைத்துறை, கோரிப்பாளையம், கோ. புதூா், மூன்றுமாவடி, ஆயுதப்படைக் குடியிருப்பு பகுதி, கண்ணனேந்தல், ஊமச்சிக்குளம், சோழவந்தான், வாடிப்பட்டி, பேரையூா், உசிலம்பட்டி, அழகா்கோவில் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.