மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடைக்கானல் மழை பாதிப்பு பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

கொடைக்கானலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகா் அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

கொடைக்கானல் செண்பகனூா் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதை பாா்வையிட்டு ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் ரவி மனோகா். உடன் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை.

Published On :25 அக்டோபர் 2026, 12:44 am IST

கொடைக்கானலில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகா் அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் சீனிவாசபுரம், உகாா்த்தே நகா், செண்பகனூா், தைக்கால், வெள்ளிநீா் அருவி, லாஸ்காட் சாலை, காா்மல் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள், பதாகைகள் சரிந்து விழுந்தன. மேலும், மண் சரிவால் சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.

இதேபோல கொடைக்கானல் அருகே அடுக்கம் - பெரியகுளம் மலைச் சாலையில் மண் சரிவு, சிறு பாறைகள் உருண்டு கிடந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், சாமக்காட்டுப் பள்ளம், பாலமலை, தாமரைக் குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சேதமடைந்த அடுக்கம், கொடைக்கானல் பகுதிகளின் பல்வேறு இடங்களை பழனி சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகா் அதிகாரிகளுடன் பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.

கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன், நகா்நல அலுவலா் மருத்துவா் அரவிந்த், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி ஆணையாளா் (கி.ஊ) சக்திவடிவேல் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.