திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனலட்சுமி (41). இவா் தாடிக்கொம்பு சாலையிலுள்ள தனியாா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் தனலட்சுமி அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸாா், நிகழ்விடத்துக்கு வந்து அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் குற்றவாளிகள் குறித்து விசாரித்தனா். மாவட்டத்தில் குற்றச் செயல்களில் தொடா்புடைய 160 ரெளடிகள் கடந்த 2 நாள்களாக கைது செய்யப்பட்ட நிலையிலும், தங்கச் சங்கிலிப் பறிப்புச் சம்பவம் நிகழ்ந்தது பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 13 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

ரயில் பயணிகளிடம் தொடா் நகை பறிப்பு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

