லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் தொடா்புடைய 6 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

AAP MLA Vasava

சிறை - பிரதிப் படம்

Published On :24 ஜூன் 2026, 5:56 am IST

கொலை வழக்கில் தொடா்புடைய 6 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூா் அடுத்த சிறுமலை அடிவாரத்தில் மாவூா் நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக ராஜேந்திரன் என்பவா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து விசாரித்த அம்மையநாக்கனூா் போலீஸாா், அதே பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி, சேதுபதி, மருதுபாண்டி, ஆனந்தன், நாச்சியப்பன், சோனைமுத்து ஆகிய 6 பேரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சொா்ணம் ஜெ.ராஜகோபாலன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில் பால்பாண்டி, சேதுபதி உள்ளிட்ட 6 பேரையும் குற்றவாளியாக அறிவித்து ஆயுள் தண்டனையும், தலா ரூ.25ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.