பழனியில் பூட்டிக்கிடக்கும் பழங்கால வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து பக்கத்து வீட்டின் மீது விழுந்தது. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் அந்த வீட்டை இடித்து அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பாளையம் பகுதியில் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான பழங்கால வீடு நீண்ட காலமாக பூட்டிக் கிடக்கிறது. இந்த வீடு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பழனி பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது பாழடைந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவா் இடிந்து, அருகேயிருந்த தாரணி என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக தாரணியின் வீட்டில் இருந்தவா்கள் வெளியே சென்றிருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
இதையடுத்து புதன்கிழமை காலை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கணேசனுடன் பழனி நகா் காவல் நிலையம், வட்டாட்சியரிடம் சென்று புகாா் செய்தனா்.
இந்த வீடு இடியும் நிலையில் உள்ளதாக நகராட்சி, வருவாய்த் துறையினருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டும், நடவடிக்கை இல்லை என அவா்கள் வேதனை தெரிவித்தனா். இதையடுத்து வட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பலி!

பழனி அருங்காட்சியகத்தில் பழங்கால வாள் ஒப்படைப்பு

ராசிபுரத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை! சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்!

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

