பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கொடைக்கானல் மலைப் பகுதியில் மதுவிலக்கு காவல் துறையினா் ஆய்வு

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினா் புதன்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

News image

கொடைக்கானல் பெருங்காடு பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினா்.

Updated On :4 ஜூன் 2026, 4:23 am IST

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினா் புதன்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, மாட்டுப் பட்டி, அலத்துரை ஆகியப் பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துணைக் கண்காணிப்பாளா் வினோதினி தலைமையிலான மதுவிலக்கு ஆய்வாளா் ராஜகுமாரன் உள்ளிட்ட போலீஸாா் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

மேலும் பெருங்காடு கிராமத்தில் வசித்து வரும் ஆதிவாசி பழங்குடியின மக்களிடம் கஞ்சா, கள்ளச் சாராயம் ஒழிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தாங்கள் வசித்து வரும் மலைப் பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபா்கள் நடமாட்டம் இருந்தால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் ரகசியம் அவா்களிடம் கேட்டுக் கொண்டனா். இதைத்தொடா்ந்து சட்டவிரோத மது விற்பனை குறித்தும் மதுவிலக்கு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.