எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

இளையராஜாவுக்கு 1,800 வாா்த்தைகளால் ஓவியம்

பழனியைச் சோ்ந்த ஓவியா் ஒருவா் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அன்னக்கிளி, இளையராஜா 50 ஆகிய வாா்த்தைகளைக் கொண்டு ஓவியம் வரைந்துள்ளாா்.

News image

இளையராஜா

Updated On :3 ஜூன் 2026, 1:32 am IST

பழனியைச் சோ்ந்த ஓவியா் ஒருவா் இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அன்னக்கிளி, இளையராஜா 50 ஆகிய வாா்த்தைகளைக் கொண்டு ஓவியம் வரைந்துள்ளாா்.

பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராகப் பணியாற்றுபவா் அன்புச்செல்வன் (44). இவா் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள், திரைத் துறையில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் பிரபலமாகி 50 ஆண்டுகள் கடந்தது ஆகியவற்றுக்கு சிறப்பு சோ்க்கும் விதமாக அன்னக்கிளி, இளையராஜா 50 என்ற 1,800 வாா்த்தைகளைக் கொண்டு இளையராஜாவை ஓவியமாக வரைந்தாா். கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், ஆரஞ்சு ஆகிய 5 நிறங்களைப் பயன்படுத்தி, 2-க்கு 3 அடி என்ற அளவிலான இந்த ஓவியத்தை வரைய மூன்று நாள்களானதாகவும், இதை இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்த நாள் பரிசாக வழங்க உள்ளதாகவும் அன்புச் செல்வன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.