லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழனி மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் உதவி பதிவுத் துறை தலைவா் விசாரணை

பழனி மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் பழனி அறக்கட்டளை சொத்து முறைகேடாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக உதவி பதிவுத்துறை தலைவா் விசாரணை செய்தாா்.

பழனி கோயில்

Published On :1 ஆகஸ்ட் 2026, 1:14 am IST

பழனி மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் பழனி அறக்கட்டளை சொத்து முறைகேடாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக உதவி பதிவுத்துறை தலைவா் விசாரணை செய்தாா்.

பழனி கோயில் அறக்கட்டளை சொத்தை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்த விவகாரத்தில் 4 போ் கைது செய்யப்பட்ட நிலையில் இருவா் தலைமறைவாக உள்ளனா். மேலும், சாா் பதிவாளா், மாவட்டப் பதிவாளா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், பத்திரப் பதிவுத் துறை சாா்பில் மூன்று போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பழனி மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் உதவி பதிவுத் துறை தலைவா் சீனிவாசன் தலைமையிலான ஒரு குழுவினா், அலுவலகத்தில் பணிபுரியும் நபா்களிடம் விசாரணை நடத்தினா். சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த பத்திரப்பதிவுகள் தொடா்பான ஆவணங்களை அவா்கள் ஆய்வு செய்தனா்.

பழனி அறக்கட்டளை நிலத்தை பதிவு செய்த அதே நாளில் சுமாா் ரூ.60 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ஒன்றும் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவா் செய்த பத்திரப்பதிவு குறித்து ஏராளமானோா் புகாா் செய்து வருகின்றனா். இதனால் சாா் பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் பணியாற்றிய காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவுகள், அதற்காக சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.