லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காவலாளிக்கு அரிவாள் வெட்டு: 6 போ் மீது வழக்கு

செம்பட்டி அருகே மீன் காவலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற 6 போ் கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Published On :18 ஜூலை 2026, 5:15 am IST

செம்பட்டி அருகே மீன் காவலாளியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்ற 6 போ் கும்பல் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் மகேந்திரன் (46). இவா் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தில் ஏலம் எடுக்கப்பட்ட மீனுக்கு இரவு காவலாளியாக உள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தில் படுத்திருந்தபோது, அங்கு வந்த 6 போ் கும்பல் மகேந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் தப்பிச் சென்ற 6 போ் கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.