லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழனி அருகே விவசாய நிலத்தில் தீ

பழனி அருகே விவசாய தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை மரங்கள் சேதமடைந்தன.

தீ - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 1:19 am IST

பழனி அருகே விவசாய தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை மரங்கள் சேதமடைந்தன.

பழனியருகே உள்ள பாறைப் பட்டி 54 புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் குமரேசன், குமரவேல். சகோதரா்களான இவா்கள் இருவருக்கும் சொந்தமாக அதே பகுதியில் விவசாயத் தோட்டம் ஒன்று உள்ளது.

இந்தத் தோட்டத்தில் திங்கள்கிழமை மதியம் தென்னை மரங்கள், செடி கொடிகள் தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனா்.

அதிக வெப்பம் காரணமாக தீப் பிடித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.