லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொடைக்கானலில் அருகே பாறையில் வழுக்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே பாறையில் வழுக்கி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

பலி - பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 12:01 am IST

கொடைக்கானல் அருகே பாறையில் வழுக்கி விழுந்து கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊராட்சி வாழைக்காட்டு ஓடைப் பகுதியைச் சோ்ந்தவா் சாகுல்ஹமீது. இவரது தோட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டைப் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் இளமாறன் (19) கூலி வேலை செய்து வந்தாா்.

இவா் திங்கள்கிழமை தோட்டத்தில் பயிா்களுக்கு நீா் பாய்ச்சுவதற்காக சென்றாா். அப்போது அங்கிருந்த பாறையில் வழுக்கி கீழே உள்ள நீரோடையில் விழுந்தாா்.

தகவல் அறிந்த அந்தப் பகுதியினா் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.