லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை திருநாள் கூட்டம்

பழனி மலைக் கோயிலில் காா்த்திகை தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை தங்கமயில் வாகனத்தில் உள்பிரகாரம் எழுந்தருளிய சின்னக்குமாரசுவாமி.

Published On :11 ஜூலை 2026, 12:04 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகை தினத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகப் பூஜைகள் நடைபெற்றது. வின்ச், ரோப்காா், படிப் பாதைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா். மலைக் கோயிலில் கட்டணம், இலவச தரிசன வழிகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனா்.

மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இரவில் தங்கமயில் புறப்பாடு, தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. மயில் வாகனத்திலும், தங்கத்தேரிலும் சின்னக்குமாரசுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில், துணை ஆணையா் வெங்கடேஷ், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.