லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா்.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா்.

Published On :11 ஜூலை 2026, 2:47 am IST

அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின்

மாவட்டத் தலைவா் செல்வ தனபாக்கியம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, அங்கன்வாடி திட்டத்தை தனியாா் மயம் என்ற பெயரில் சீா்குலைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் பணிக் கொடை வழங்க வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிபந்தனையின்றி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி ஊழியா்களுக்கு பதவி உயா்வும், உள்ளூா் பணியிட மாறுதலும் உடனடியாக வழங்க வேண்டும். உணவூட்டு செலவினத்துக்கான தொகை முன் பணமாக வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்களை பிற துறைப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்பன உள்ளிட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.