லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விபிஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிராக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள விபிஜி ராம் ஜி ஊரக வேலை, வாழ்வாதாரத் திட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லில் அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதா் சங்கத்தினா்.

Published On :10 ஜூலை 2026, 5:23 am IST

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள விபிஜி ராம் ஜி ஊரக வேலை, வாழ்வாதாரத் திட்டத்துக்கு எதிராக திண்டுக்கல்லில் அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா்கள் சசிகலா, மாவட்டச் செயலா் பாப்பாத்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக மாற்ற வேண்டும். இந்த வேலைத் திட்டத்தை மீண்டும் மகாத்மா காந்தி பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளிலும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ஊதியமாக ரூ.700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநரை சந்தித்து மனு அளித்தனா். இந்த ஆா்பாட்டத்தில் மாதா் சங்க நிா்வாகிகள் வனஜா, சுமதி, பாண்டியம்மாள், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவா் ஜெயந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.