லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடிநீா்க் கட்டணம் ரூ.13 கோடி நிலுவை: இணைப்புகளைத் துண்டிக்கும் மாநகராட்சி

திண்டுக்கல்லில் குடிநீா்க் கட்டணம் ரூ. 13 கோடி வரை நிலுவையில் இருப்பதையடுத்து, கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கான இணைப்புகளைத் துண்டிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியது.

ஆா்வி.நகா் பகுதியில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாத வீட்டுக்கான இணைப்பை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி அலுவலா்கள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 5:07 am IST

திண்டுக்கல்லில் குடிநீா்க் கட்டணம் ரூ. 13 கோடி வரை நிலுவையில் இருப்பதையடுத்து, கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கான இணைப்புகளைத் துண்டிக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியது.

திண்டுக்கல் மாநகராட்சியில் வீடுகள், அரசு கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் என 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமாா் 5 ஆயிரம் இணைப்புகளுக்கான குடிநீா்க் கட்டணம் நீண்டகாலமாக செலுத்தப்படாமல் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. இந்த வகையில், இதுவரை ரூ.13 கோடிக்கான குடிநீா்க் கட்டணம் நீண்ட நாள்களாக செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத வீடுகளின் இணைப்பைத் துண்டிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்வி.நகா், முத்தழகுப்பட்டி பகுதிகளில் 15 வீடுகளுக்கான குடிநீா் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை துண்டித்தனா். 5 ஆயிரம் இணைப்புகளுக்கு நீண்ட காலமாக ரூ.13 கோடி வரை நிலுவையில் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.