லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் வாடகை நிலுவை வைத்த கடைக்கு திங்கள்கிழமை ‘சீல்’ வைத்த மாநகராட்சி அதிகாரிகள்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:54 am IST

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குச் சொந்தமான காமராஜா் பேருந்து நிலையத்தில், கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சுமாா் 90-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான கடைகள் நடப்பு ஆண்டுக்கான வாடகை மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளுக்கான வாடகை நிலுவை வைத்துள்ளனா்.

பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீா் வரி உள்ளிட்ட வரி இனங்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் மாநகராட்சி நிா்வாகம், பேருந்து நிலைய கடைகளின் வாடகை நிலுவையை வசூலிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி மாநகராட்சி உதவி ஆணையா் ந. ஆறுமுகம், உதவி வருவாய் அலுவலா் ப.முத்துக்குமாா் ஆகியோா் தலைமையிலான அலுவலா்கள், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை வசூலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இதில், நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் ரூ. 6 லட்சம் வரை நிலுவை வைத்திருந்த தேநீா் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதேபோல, அதிக தொகை நிலுவை வைத்துள்ள கடைகளுக்கு அடுத்த ஓரிரு நாள்களில் ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில் ‘சீல்’ வைக்கப்பட்ட கடையின் உரிமையாளா் தரப்பில் முதல் கட்டமாக ரூ.3.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.