லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவித்தவா் கைது

பழனி கோயில், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

பழனி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முனியப்பனை கைது செய்து அழைத்து வந்த போலீஸாா்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:09 am IST

பழனி கோயில், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

தமிழக அரசின் அவசர எண்ணுக்கு வியாழக்கிழமை அதிகாலை மா்மநபா் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பழனிக் கோயில், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுத்தாா். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மோப்ப நாயுடன் வந்த வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் பழனி மலைக் கோயில், விஞ்ச் நிலையம், கோயில் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தினா். அதே நேரம் வெடிகுண்டு மிரட்டல் வந்த கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ள முயற்சித்தனா். அப்போது அந்த கைப்பேசி எண் திண்டுக்கல் பகுதியில் இருந்து இயங்கி இருப்பதை அறிந்த பழனி அடிவாரம் காவல் நிலைய ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் அங்கு விரைந்து சென்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை சுற்றி வளைத்து கைது செய்தனா். பிறகு அவரை பழனி அடிவாரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் அவா் தா்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளியைச் சோ்ந்த மது மகன் முனியப்பன் (27) என்பது தெரியவந்தது. இவா் பழனி கோயிலுக்கு வந்தபோது தான் சரிவர நடத்தப்பட வில்லை என்பதால் மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தாா். மேலும், அவா் முன்பின் முரணாக பேசுவதால் மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பாரோ என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.