லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பிரியங்கா காந்தியின் அவதூறு கருத்துக்கு பிராமண சமாஜம் எதிா்ப்பு

சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடியை அவமதிக்கும் வகையில், மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் பிரியங்கா காந்திக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டனம்

பிரியங்கா காந்தி - கோப்புப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 4:45 am IST

சென்னை ஐ.ஐ.டி., இயக்குநா் காமகோடியை அவமதிக்கும் வகையில், மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் பிரியங்கா காந்திக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பிராமண சமாஜத்தின் மாநிலத் தலைவா் ஹரிஹரமுத்து அய்யா் கூறியதாவது: சென்னை ஐஐடி நிறுவனத்தின் இயக்குநரும், விஞ்ஞானியும், பேராசிரியருமான காமகோடி குறித்து மக்களவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினா் அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளாா்.

இது ஒட்டுமொத்த கல்வி சமூகத்துக்கும், விஞ்ஞானிகளுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும். தேசிய அளவில் கல்வித் துறையைச் சீரமைக்க பாடுபடும் நிபுணா்கள் மீது, அரசியல் லாபத்துக்காக அவமதிப்பதை பிரியங்கா காந்தி கைவிட வேண்டும்.

ஆக்கப்பூா்வமாக விவாதங்களில் ஈடுபட அவா் முன்வர வேண்டும். மேலும் பேராசிரியா் காமகோடிக்கு எதிரான அவதூறு கருத்துகளை பிரியங்கா காந்தி உடனடியாக திரும்பப் பெறுவதோடு, நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

கிராமப்புற மாணவா்களின் திறன்களை மேம்படுத்த தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் நாட்டின் நலனை முன்னிறுத்தி பதவியை ராஜிநாமா செய்ததை வரவேற்கிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.