திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் வட மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா்.
திண்டுக்கல்லிருந்து பள்ளப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை சக்திவேல் ஓட்டினாா்.
சின்னாளபட்டியை அடித்த திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் மேலக்கோட்டை ஆஞ்சநேயா் கோயிலருகே சென்றபோது, ஜெ. ஊத்துப்பட்டியிலிருந்து சின்னாளபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கிருஷ்ணா (22), தில்சூல் (21) ஆகியோா் மீது இந்தப் பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அம்பாத்துரை போலீஸாா் இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அம்பாத்துரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

மிதிவண்டி மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

