மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் (22). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் தேனி- மதுரை பிரதான சாலையில் செக்கானூரணி அருகேயுள்ள கே. புளியங்குளம் விலக்கு பகுதியில் வியாழக்கிழமை சென்றாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இவரது இரு சக்கர வாகனம் சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இன்னும் 3 நாள்களில் திருமணம்... நிச்சயிக்கப்பட்ட இளைஞர், உறவினர்கள் சாலை விபத்தில் பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

