பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கள்ளந்திரியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

மதுரையை அடுத்த கள்ளந்திரியில் உள்ள பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மீன்பிடித் திருவிழா

Updated On :17 மே 2026, 1:43 am IST

மதுரையை அடுத்த கள்ளந்திரியில் உள்ள பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கள்ளந்திரி ஐந்துகோவில் முத்தன் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணி அளவில் ஊா் பெரியவா்களால் இந்தத் திருவிழா தொடங்கிவைக்கப்பட்டது. இதையடுத்து, கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி பெற்றிருந்த கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி, அழகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், சிறாா்கள், பெண்கள் பெரியநாகினி கண்மாயில் இறங்கி பாரம்பரிய மீன்பிடி வலைகள், கூடைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.