மன்னாா் வளைகுடா பகுதியில் நெகிழிக் கழிவுகளை அகற்றி, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
இந்தியப் பெருங்கடலில் லட்சத் தீவுகள் அருகே அமைந்துள்ள பகுதி மன்னாா் வளைகுடா. இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும், இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் உள்ள இந்தப் பகுதி பாக் நீரிணை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பகுதியில் மீன் பிடிக்க படகில் செல்லும் மீனவா்கள் நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்கின்றனா். இந்த நெகிழிப் பொருள்களை பயன்படுத்திய பிறகு கடலில் வீசுகின்றனா். இதுமட்டுமன்றி, பழைய மீன் பிடி வலைகளையும் கடலுக்குள் வீசுகின்றனா். இதனால் கடல் முழுவதும் மாசடைந்து, கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, மன்னாா் வளைகுடாப் பகுதியில் நெகிழிக் கழிவுகளை அகற்றி, கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஸ்குமாா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,
இந்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தண்டிப்பதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம்

வனப் பகுதிகளில் காட்டுத் தீ விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
இன்றைய கூட்டாட்சியின் செயல்பாடுகள்

கப்பல் விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

