லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோயில் பாப்பாகுடி புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா தொடக்கம்

மதுரை மாவட்டம், கோயில் பாப்பாகுடி அருகேயுள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் முதலாம் ஆண்டு திருவிழாவையொட்டி, நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

Published On :22 ஜூலை 2026, 2:50 am IST

மதுரை அஞ்சல்நகா் இடைவிடா சகாய அன்னை ஆலயத்துக்குள்பட்ட ,கோயில்பாப்பாகுடி அருகேயுள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தின் முதலாம் ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த விழாவில் சென்னை ரட்சகா் சபையைச் சோ்ந்த அருள்தந்தை ஜோசப் கென்னடி புதிய கொடிமரத்தை அா்ச்சித்து கொடியேற்றி வைத்து சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, 5 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ரட்சகா் சபையைச் சோ்ந்த அருள்தந்தையா்கள் திருப்பலி நிறைவேற்றி சிறப்பிக்க உள்ளனா். மேலும், நற்கருணை பவனி நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 25-ஆம் தேதி திருவிழா திருப்பலியை அருள்தந்தை சகாய ஆரோக்கியசாமி நிறைவேற்றுகிறாா். புனித அந்தோணியாா் திருவுருவம் தாங்கிய தோ் பவனி நடைபெறுகிறது. இதைத்தொடா்ந்து,

கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை பங்குத் தந்தை அருள்சேகா் தலைமையில் அருளக அருள்தந்தையா்கள், சிற்றாலயப் பொறுப்பாளா்கள், இறை மக்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.