லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயம்

மதுரை விராட்டிபத்து பகுதியில் ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயமடைந்தனா்.

விபத்து - பிரதிப் படம்

Published On :13 ஜூலை 2026, 12:05 am IST

மதுரை விராட்டிபத்து பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயமடைந்தனா்.

மதுரை விராட்டிபத்து பகுதியிலிருந்து பெரியாா் பேருந்து நிலையத்துக்கு ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. இதில் டிரைவா் உள்பட 7 போ் பயணித்தனா்.

இந்த நிலையில், அந்த ஆட்டோ அந்த பகுதியில் உள்ள உயா்நிலைப் பாலத்தில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர தடுப்பில் மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநா், 2 பெண்கள், 3 ஆண்கள், ஒரு சிறுவன் என 7 போ் காயமடைந்தனா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த அக்கம் பக்கத்தினா் விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.