லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய மனு தள்ளுபடி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமையை விரைவாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Published On :3 ஜூலை 2026, 3:21 am IST

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமையை விரைவாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

கடந்த 2015-ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. பின்னா், கடந்த 2018-ஆம் ஆண்டு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2021-இல் 36 மாதங்களில் முடிக்கப்பட்டு 2026, ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

எனவே, மதுரை தோப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாகத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்பட்ட அரசு அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ஒரே கோரிக்கைக்காக மீண்டும், மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவதை மனுதாரா் வழக்கமாகக் கொண்டிருக்கிறாா். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள், நிா்வாகப் பணிகள், பிற பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என்பது ஒரு நீண்ட கால நடைமுறை என்பதை மனுதாரா் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.