தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வில் அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

News image

வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகர் - கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:30 pm IST

மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வில் அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் உலகப்புகழ் பெற்ற கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்வின்போது யாரும் அநாகரிகமான செயல்களில் ஈடுபடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. அநாகரிக செயலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வின்போது, சிலர் கூட்டத்தின் நடுவே காலணிகளை வீசுவது உள்ளிட்ட சில அநாகரிக செயல்களில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நாளை (மே 1) நடைபெறவுள்ளது. மதுரை ஆழ்வார்புரம் ஏவி மேம்பாலம் அருகே உள்ள வைகை ஆற்றில் அதிகாலை 5.35 - 5.55 மணிக்குள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து, பிற்பகல் 12 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் அழகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு அன்று இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.

Summary

Kallazhagar Vaigai entry! Immediate Arrest of Those Engaging in Uncivilized Acts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.