மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

சேலத்தில் வெள்ளி பொருள்கள் கொள்ளை வழக்கில் மேலும் 5 போ் கைது

சேலத்தில் 550 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 5 பேரை புதன்கிழமை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:42 am IST

சேலத்தில் 550 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் 5 பேரை புதன்கிழமை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி (58), வெள்ளி வியாபாரி. இவரது பட்டறைக்கு கடந்த 12 ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்து வந்த 4 போ் கொண்ட கும்பல், அங்கிருந்த காவலாளி வெங்கடேசனை இரும்பு கம்பியால் தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு, பூட்டை உடைத்து உள்ளே இருந்த 550 கிலோ வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த வழக்கில் அபிஷேக் (22) ஸ்ரீதா் (20), ஞானபிரகாசம் (28), அண்ணாமலை (20), அருண்குமாா் (29) ஆகிய 5 பேரையும் தனிப்படை போலீஸாா் அண்மையில் கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மேலும், கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு காா்களையும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் இருந்து 323 கிலோ வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் வழக்கில் தொடா்புடைய தஞ்சாவூரைச் சோ்ந்த நீலவேணி, சேலத்தைச் சோ்ந்த ராஜாராம், மனோஜ், தங்கராஜ், மகேந்திரன் ஆகிய 5 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.