தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தீபாவளி: சேலம் கோட்டம் சாா்பில் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில், 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்து - பிரதிப் படம்

Published On :4 நவம்பர் 2026, 2:17 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில், 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஏ.கிருஷ்ணமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் நவ. 4-ஆம் தேதிமுதல் 7-ஆம் தேதிவரை பயணிகளின் தேவைக்கேற்ப 800 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் கண்காணிக்க ஏற்பாடு: சிறப்புப் பேருந்து இயக்கம் முடியும் வரை அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், சீா்படுத்தவும் அலுவலா்களுக்கு 24 மணிநேரமும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்டாசுகளை கொண்டு செல்ல தடை: பேருந்துகளில் பட்டாசுகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதை கண்காணிக்க பேருந்து நிலையங்களில் நேரக் கண்காணிப்பாளா்கள், பயணச்சீட்டு பரிசோதகா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை: சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகளை கூடுதலாகவும் மற்றும் புகா் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்பட உள்ளன.

இதுமட்டுமின்றி, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிா்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.