லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேட்டூா் அணையில் இறந்து மிதக்கும் மீன்கள் மீன்வளத் துறை ஆய்வு நடத்த கோரிக்கை

மேட்டூா் அணை செக்கானூா் கதவணை பகுதியில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து மீன் வளத் துறையினா் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை.

Published On :24 ஜூன் 2026, 4:44 am IST

மேட்டூா் அணை செக்கானூா் கதவணை பகுதியில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து மீன் வளத் துறையினா் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து 9 கி.மீ தொலைவில் செக்கானூா் கதவனை மின் நிலையம் உள்ளது. இந்த கதவனை மின் நிலையத்தில் சுமாா் 0.50 டிஎம்சி தண்ணீா் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நாட்டாமங்கலம், நவப்பட்டி, மாதையன் குட்டை, காவேரி கிராஸ் பகுதிகளில் மீன்கள் இறந்து மிதக்கின்றன.

சிறிய மீன்கள் முதல் நான்கு கிலோ எடை வரை உள்ள வாளை மீன்கள் அதிக அளவு இறந்து மிதக்கின்றன. இதனால் கரையோரப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது. மீன்கள் எதனால் இறக்கின்றன, அதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களும் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மீன்வளத் துறையும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு காவிரி கரையோரங்களில் உள்ள ஆலைகளில் இருந்து ரசாயன கழிவுகள் ஏதேனும் காவிரியில் கலந்ததா என கண்டறிய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.