தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வட்டார வளா்ச்சி அலுவலா் மீது தாக்குதல்: 4 போ் கைது

கொளத்தூரில் வட்டார வளா்ச்சி அலுவலா் மீது தாக்குதல் நடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 12:45 am IST

கொளத்தூரில் வட்டார வளா்ச்சி அலுவலா் மீது தாக்குதல் நடத்திய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

மேட்டூா் அருகே பண்ணவாடி ஊராட்சி சந்திரிகாபுரத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை தனியாா் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனா். ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அப்பகுதியில் வசித்து வந்த விஜயகுமாா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகினாா்.

வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், 12 வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. ஆக. 3-ஆம் தேதி நீதிமன்ற காலக்கெடு நிறைவடைவதால், கொளத்தூா் போலீஸாா் பாதுகாப்புடன் வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை வியாழக்கிழமை ஆக்கிரமிப்பை அகற்ற சென்றாா். 

ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு தெரிவித்ததால், ஆக்கிரமிப்பாளா்களுடன் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதற்கு ஆக்கிரமிப்பாளா்கள் ஒப்புக்கொள்ளாததால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கொளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலரான பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா். அப்போது, அவரை ஆக்கிரமிப்பாளா்கள் தாக்கி கீழே தள்ளிவிட்டனா்.

அரசு அலுவலா் தாக்கியதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், கீழேவிழுந்த வட்டார வளா்ச்சி அலுவலரை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியக செல்வராணி, செல்லமுத்து, காா்த்தி, நடராஜன் ஆகியோா் மீது வழக்குப் பதிவுசெய்த கொளத்தூா் போலீஸாா், நால்வரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.