லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சங்ககிரி அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி

பலி

Published On :30 ஜூலை 2026, 5:42 am IST

சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே லாரியின் பின்புறத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு மரப்பாலம் கோப்பெருந்தேவி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஷாகுல்அமீத் (36). இவா் ஈரோட்டிலிருந்து சேலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றபோது எதிா்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் அவரது இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷாகுல் அமீது ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை இறந்தாா்.

இதுகுறித்து சங்ககிரி போலீஸாா், லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.