லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இடங்கணசாலையில் தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5,000 அபராதம்

இடங்கணசாலையில் மருத்துவக் கழிவுகளை மலைபோல கொட்டி வைத்திருந்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதம் - சித்திரிப்பு

Published On :30 ஜூலை 2026, 5:29 am IST

இடங்கணசாலையில் மருத்துவக் கழிவுகளை மலைபோல கொட்டி வைத்திருந்த தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட இளம்பிள்ளை -சின்னப்பம்பட்டி பிரதான சாலை அருகே உள்ள சக்தி நகரில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் சேகரமாகும் கழிவு பொருள்களை மருத்துவமனையின் பின்பகுதியில் மலைபோல குவித்து வைத்துள்ளனா். இதுகுறித்து நகராட்சித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா். அப்போது மருத்துவமனைக்கு வெளியே கொட்டிக் வைத்துள்ள கழிவு பொருள்களை அகற்றுமாறு தெரிவித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.