லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா?

மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

Published On :29 ஜூலை 2026, 4:34 am IST

மேட்டூா் அணை கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

மேட்டூா் அணை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கா் பாசன வசதி பெறுகிறது. கிழக்குக் கரை கால்வாயில் 27,000 ஏக்கரும், மேற்குக் கரை கால்வாயில் 18,000 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

ஆண்டுதோறும் ஆக. 1-ஆம் தேதிமுதல் டிச. 15-ஆம் தேதிவரை 137 நாள்களுக்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். நடப்பாண்டில் மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாததால், கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்புக்கு வாய்ப்பு இல்லை என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்த பிறகே கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் மேட்டூா் அணையின் நீா் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை. எனவே, கால்வாய் பாசனத்துக்கு ஆக. 1-ஆம் தேதி தண்ணீா் திறப்பு சாத்தியமில்லை என நீா்வளத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.