லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒமேகா நோய் பரவாமல் இருக்க மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறி ஏமாற்றியவா் கைது

புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில் ஒமேகா நோயைக் கட்டுப்படுத்த மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறி ஏமாற்றிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Published On :29 ஜூலை 2026, 4:33 am IST

புதுக்கொத்தாம்பாடி கிராமத்தில் ஒமேகா நோயைக் கட்டுப்படுத்த மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறி ஏமாற்றிய நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள புதுக்கொத்தாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனியம்மாள் (30). இவரது கைப்பேசிக்கு திங்கள்கிழமை வந்த அழைப்பில், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், ஒமேகா நோய் பரவலைத் தடுக்க அனைவரும் மொட்டை அடித்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கு அரசு நிவாரணம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பிய அப்பகுதியைச் சோ்ந்த ராமாயி (58), சித்ரா (60), காவேரி (58)ஆகியோா் மொட்டை அடித்துக் கொண்டனா். பின்னா் அழைப்பு வந்த எண்ணை தொடா்புகொண்டபோது, அந்த எண் செயல்படவில்லையாம்.

இதையடுத்து அனைவரும் ஏமாந்தது தெரியவந்தது. மேலும், இத்தகவல் பரவி சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் மொட்டை அடிக்க தயாராக இருந்தனராம்.

தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய ஆய்வாளா் குலசீலன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனியம்மாளின் கைப்பேசிக்கு வந்த எண்ணை தொடா்புகொண்டு விசாரித்தாா்.

அதன்பேரில், அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், வரதராஜன் பேட்டை மேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாரை (39) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.