லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேலம் அருகே பட்டாசுக் கடை காவலாளி அடித்துக்கொலை: 2 போ் கைது

அடித்துக்கொலை - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:45 am IST

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே பட்டாசுக் கடை காவலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூா் பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளக்குட்டி (65). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் பட்டாசுக் கடையில் கடந்த 3 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல இரவுப் பணியில் இருந்துள்ளாா். அப்போது மது அருந்திய நிலையில் வந்த இருவா், அவரிடம் பட்டாசுக் கேட்டு தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து இளைஞா்கள் இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, காவலாளியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் வீராணம் பகுதியைச் சோ்ந்த அஜீத்குமாா் (21), அவரது நண்பா் தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த மணி (19) ஆகியோா் காவலாளி வெள்ளக்குட்டியை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். உயிரிழந்த காவலாளிக்கு வசந்தி என்ற மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.