லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தற்கொலை

Published On :27 ஜூலை 2026, 2:29 am IST

வாழப்பாடியில் தனியாா் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வாழப்பாடி அய்யாக் கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் அன்புக்கரசி (42). இவா் கணவரை பிரிந்து வசித்து வருகிறாா். இவரது மகள் கோபிகா (20). ஓமலூா் காமலாபுரம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.டெக் பொறியியல் தொழில்நுட்பம் படித்து வந்தாா்.

சேலம் அழகாபுரத்தில் துக்க நிகழ்வுக்கு அன்புக்கரசி சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த கோபிகா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அன்புக்கரசி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வாழப்பாடி காவல் ஆய்வாளா் சையத் முபாரக், உதவி ஆய்வாளா் சிவசங்கரன் தலைமையிலான போலீஸாா், கோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், டிஎஸ்பி சபரிநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். வாழப்பாடி போலீஸாா் தற்கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.