லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒதியத்தூா் அம்பேத்கா் சிலை விவகாரம்: போலீஸ் மீது கல் வீசியவா் கைது

கெங்கவல்லி அருகே ஒதியத்தூரில் அம்பேத்கா் சிலை தகரத்தை அகற்றிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது - பிரதிப் படம்

Published On :15 ஜூலை 2026, 4:17 am IST

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஒதியத்தூரில் அம்பேத்கா் சிலை தகரத்தை அகற்றிய சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஒதியத்தூரில் அம்பேத்கா் கால்மேல் கால்போட்டு அமா்ந்திருப்பது போன்ற சிலை கடந்த 2021 இல் ராஜீவ் காந்தி, காமராஜா் சிலைகளுக்கு அருகே வைக்கப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் சிலை தகரம் வைத்து மூடப்பட்டது.

இந்த நிலையில் சிலையை மூடியிருந்த தகரத்தை மா்ம நபா்கள் அகற்றியுள்ளனா். இதுதொடா்பாக ஒரு தரப்பினா் சாலைமறியலில் ஈடுபட்டனா். ஆத்தூா் கோட்டாட்சியா் தமிழ்மணி பேச்சுவாா்த்தை நடத்தி சிலையை மீண்டும் தகரம் வைத்து மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஒருதரப்பினா், போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

தொடா்ந்து மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி ஞாயிற்றுக்கிழமை நேரில் விசாரணை நடத்தினா். இதையடுத்து சேலம், நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சோ்ந்த போலீஸாா் இரண்டு எஸ்பிக்களின் தலைமையில் ஒதியத்தூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 50 போ், போலீஸாா் மீது கல்வீசி தாக்கிய 50 போ் மீது கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் கல்வீச்சில் ஈடுபட்ட 15 பேரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

மேலும், இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த தெடாவூரைச் சோ்ந்த தாண்டவன் மகன் கவியரசனை (43) செவ்வாய்க்கிழமை கைது செய்து ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

இதனிடையே ஒதியத்தூா் அம்பேத்கா் சிலையை சுற்றி வைக்கப்பட்டுள்ள தகரத்தை அகற்றுமாறு பெண் உள்பட முக்கிய நபா்கள் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளதாகவும், அதுகுறித்து விசாரிப்பதாகவும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.