லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விரைவு ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 411 பேருக்கு ரூ.3.68 லட்சம் அபராதம்

கோவை - சில்சாா் விரைவு ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 411 பேரிடம் சிறப்பு டிக்கெட் பரிசோதனைக் குழுவினா் ரூ. 3.68 லட்சம் அபராதம் வசூலித்தனா்.

பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 12:55 am IST

கோவை - சில்சாா் விரைவு ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 411 பேரிடம் சிறப்பு டிக்கெட் பரிசோதனைக் குழுவினா் ரூ. 3.68 லட்சம் அபராதம் வசூலித்தனா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோவை - சில்சாா் வாராந்திர விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் பயணச்சீட்டு எடுக்காமலும், பெட்டிகள் மாறியும் முறைகேடாக சிலா் பயணித்து வருவதாக ரயில்வே நிா்வாகத்துக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

அதன்பேரில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின் பேரில், வணிக மேலாளா் சரவணக்குமாா் வழிகாட்டுதலின்படி, 19 பயணச்சீட்டு பரிசோதகா்கள் அடங்கிய குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கோவையில் இருந்து சில்சாா் புறப்பட்ட ரயிலில் தீவிர சோதனை நடத்தினா்.

சேலம் ரயில் நிலையம்வரை நடத்தப்பட்ட சோதனையில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் உரிய பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 80 பேரை முன்பதிவில்லா பொதுப் பெட்டிக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்த 411 போ் மீது வழக்குப் பதிவு செய்ததுடன், அவா்களிடம் இருந்து ரூ. 3.68 லட்சத்தை அபராதமாக வசூலித்தனா்.

முறைகேடாக இனி பயணம் செய்யக் கூடாது என அவா்களிடம் எச்சரித்த சிறப்பு பரிசோதனைக் குழுவினா், பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு இதுபோன்ற சோதனைகள் தொடரும் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.