தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கத்தியைக் காட்டி பணம் பறித்த ரௌடி கைது

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரௌடி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த பிரபல ரௌடி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மேட்டூா் பாரதி நகரை சோ்ந்த ரவி (38), கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை மாலை சங்கிலி முனியப்பன் கோயிலுக்கு செல்ல மேட்டூா் அனல் மின் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அங்கு நின்றிருந்த கருமலைக்கூடல் சின்னையரெட்டி தெருவைச் சோ்ந்த ரௌடி சூா்யா (26), ரவியை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியை கழுத்தில் வைத்து, அவரிடமிருந்து ரூ. 600 பறித்துக்கொண்டு மிரட்டினாா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சிலா் வரவே சூா்யா அங்கிருந்து தப்பிச் சென்றாா். புகாரின்பேரில், கருமலைக்கூடல் காவல் ஆய்வாளா் பிரபா வழக்குப் பதிவுசெய்து சூா்யாவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.