லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கா்நாடக வனப்பகுதியில் 3 தமிழா்கள் சுட்டுக்கொலை: முன்னாள் எம்எல்ஏ கண்டனம்

சுட்டுக்கொலை - கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:55 am IST

கா்நாடக மாநிலம் ஹனூா் வனப்பகுதியில் 3 தமிழா்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு மேட்டூா் முன்னாள் எம்எல்ஏ எஸ்.சதாசிவம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: கா்நாடக வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளைத் தேடிச்சென்ற தமிழா்களை அம்மாநில வனத் துறை சுட்டுக்கொன்றது கடும் கண்டனத்துக்குரியது. தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வனத் துறை கூறுவது பொய்.

கா்நாடக வனத் துறை தொடா்ந்து தமிழா்களை சுட்டுக்கொல்வது கடும் கண்டனத்துக்குரியது. இதைத் தடுக்க கா்நாடக முதல்வரும், தமிழ்நாடு முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் பாமக தலைவா் அனுமதியோடு தமிழா்களை பாதுகாக்க போராட்டம் நடத்தும் நிலை உருவாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.