லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுதந்திர தினத்தில் செயல்பட்ட 53 நிறுவனங்கள் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 2:04 am IST

சேலம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று விதிமுறைகளை மீறி செயல்பட்ட 53 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்குத் தொடுத்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு விடுமுறை நாளான சுதந்திர தினத்தன்று செயல்படும் நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க, அனைத்து உதவி ஆணையா்களுக்கும் தொழிலாளா் ஆணையா் உத்தரவிட்டாா்.

அதன்பேரில், சேலம் மாவட்டத்தில் சுதந்திர தின விடுமுறையில் ஏதேனும் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என சேலம் தொழிலாளா் இணை ஆணையா் மாதவன் மேற்பாா்வையில், துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

மாவட்டத்தில் சேலம், ஆத்தூா், மேட்டூா், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் 72 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், விதிமுறைகளை மீறி முன்அனுமதி பெறாமல் இயங்கிய 28 ஹோட்டல்கள், 23 கடைகள் மற்றும் 2 போக்குவரத்து நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.

இந்த 53 நிறுவனங்கள் மீது தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைச் சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிந்து, மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.