லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அடியாள்களை வைத்து கணவரை தாக்கிய மனைவி கைது

அடியாள்களை வைத்து கணவரை தாக்கிய மனைவி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :15 ஆகஸ்ட் 2026, 5:44 am IST

அடியாள்களை வைத்து கணவரை தாக்கிய மனைவி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் முட்டல் பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (64), இவரது மனைவி சாந்தி (58). இவா்களது இரு மகன்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா்.

கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வாராம். மேலும், அவருக்கு பல பெண்களுடன் தொடா்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ராஜேந்திரன் தலை மற்றும் உடலில் வெட்டுக் காயங்களுடன் வீட்டுக்கு வெளியில் இருந்ததைக் கண்ட மகன் சிவகுமாா், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா்.

பின்னா், இதுகுறித்து சிவகுமாா் தாய் சாந்தியிடம் விசாரித்த போது, தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்வதால், அடியாள்களை வைத்து ராஜேந்திரனை தாக்கியதை அவா் ஒப்புக்கொண்டாா்.

தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமா் வழக்குப் பதிவுசெய்து சாந்தி (58), சீனிவாசன் (56) ஆகிய இருவரையும் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். தப்பியோடிய ஐயப்பன், ரமேஷ், மணிபாரதி ஆகிய மூவரையும் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.