லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Railway Announces

ரயில் - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 12:58 am IST

சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோவாவின் வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூா், திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, வாஸ்கோடகாமாவில் இருந்து செப். 6-ஆம் தேதி இரவு 9.55-க்கு புறப்பட்டு தாா்வட், ஹுப்ளி, ஹேவேரி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, திருவாரூா் வழியாக மூன்றாம்நாள் அதிகாலை 3.45-க்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து செப். 9-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு புறப்பட்டு திருவாரூா், திருச்சி, நாமக்கல், சேலம், பெங்களூரு வழியாக மூன்றாம் நாள் அதிகாலை 3 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.